குளிர்கால பருவ திருமணத்திற்கான சிறந்த மேக்கப் வழிமுறைகள்: நிபுணர்களின் அறிவுரைப்படி

Written by Kayal ThanigasalamFeb 18, 2022
குளிர்கால பருவ திருமணத்திற்கான சிறந்த மேக்கப் வழிமுறைகள்: நிபுணர்களின் அறிவுரைப்படி
இந்த வருடத்தில் உங்களுக்கு திருமண முடிச்சு விழப்போகிறதென்றால் உங்களை நாங்கள் பளிச்சிடும் உதடுகள், நிறைந்த கண்மை, வெண்மையான பூச்சுப் பெற்ற கன்னங்களுடன் பார்க்க விரும்புகிறோம். இந்த வருட இறுதியில் எதிர்பார்க்கப்பட்ட பருவம் லேகங்காக்களாலும் மற்றும் தங்க ஜரிகைப் படித்த துணிகளாலுமே நிரம்பியிருக்கப் போகிறது. ஆனால் சிறந்த பூச்சே அனைத்திற்கும் அடிப்படை என்பதை நாம் ஒற்றுக்கொள்ள வேண்டும். மறுக்க முடியாத அழகிற்கு ஒரு தீம் அவசியமே, மற்றும் அதை வடிவமைக்க நாம் நேரத்தை செலவிடலாம். குளிர்கால பருவ திருமணத்தில் மணமகளுக்கு அழகூட்டும் சிறந்த தீம்களை நாங்கள் பல்வேறு அழகுக்கலை நிபுணர்களின் பூச்சுகளை பார்த்து இந்த அழகு குறிப்புகளை தயாரித்துள்ளோம். இதனை மட்டும் நீங்கள் பின்பற்றினால், பாருங்கள்! அனைவரது பார்வையும் உங்கள் மீது தான் பதிந்திருக்கும். அவை
 

01. மினுக்கும் உதடுகள்

05. சிவப்பு நிற அடையாளங்கள்

பளிச்சிடும் உதடுகளுக்கு முன்பு எதுவும் போட்டி போட முடியாது. மேக்கப் போடாத பெண்களும், சிறிது ஐ ஷாடோ மற்றும் லிப் கிளாஸ்சுடன் இருக்கும் போது அவர்கள் உதடு மற்றும் முகம் அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். அழகுக்கலை நிபுணர் ரேவா அவர்கள் "அடர்வண்ணம் தரும் லிப்ஸ்டிக்கை விட லிப் கிளாஸ் உங்கள் முகத்தினை இயற்கையான அழகோடு இருப்பது போல காட்டும். மேலும் உங்கள் உதடுகள் நிறைந்ததாகவும் இருக்கும்" என்கிறார்.   நிபுணர் மௌஸம் காந்தி அவர்கள் " சிறிது முகப்பூச்சுடன் இயல்பான உதடுகளில் லிப் கிளாஸ் சிறிது தடவினால் போதும்... பலனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது."

நிபுணர் குறிப்புகள்: ரேவா அவர்கள் நாம் திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்பே சரும பராமரிப்பு வழக்கங்கள் சிலவற்றை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். சற்று மிகையாக இருந்தாலும் இதற்கு சிறப்பான பலன் உண்டு. மௌஸம் அறிவுரைப்படி இந்த சமயத்தில் நாம் ஒரு சரும நிபுணரை அணுகுவதும் சரிவர ஆலோசனைகளை பின்பற்றுவதும் சாலச் சிறந்தது.   

 

 

02. வண்ணம் பொங்கும் கண்கள்:

05. சிவப்பு நிற அடையாளங்கள்

"பெரும்பாலான பெண்களுக்கு கருநிறமே திருப்தியளிக்கும் கண்மையாக திகழ்கிறது. ஆனால் அந்த வழக்கத்தில்  மாறி நாம் புதிய வண்ணங்களை முயற்சிக்க வேண்டும், அதற்கு இந்த திருமணத்தை விட வேறெது சிறந்த வாய்ப்பாக இருக்கும்?", " ஆனால் தற்பொழுது பெண்கள் இவ்வகை முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது." என்கிறார் மௌஸம். மேலும், மெஹெந்தி மற்றும் ஹால்டி போன்ற விசேஷங்களுக்கு பிங்க் கலர் ஐலைனரை பயன்படுத்தினால் மிக நன்றாக இருக்கும். தற்போது அக்வா, லீலாக் மற்றும் கோல்ட் நிறங்களை பயன்படுத்துவதும் வழக்கமாகி வருகிறது.

 வண்ணமயமான கண்களை கொண்டு வருவதில் ரேவாக்கு நிகர் அவரே. அவர் கூறுகையில் " தேவையான அளவு நாம் ஐலைனரை பயன்படுத்துகையில், நம் கண்களுக்கு தேவையான கவனம் கிடைக்கும், ஆனால் நம் முகத்திற்கு அது மிகையாக இருக்காது." "மணமகளுக்கு இது போன்ற முயற்சியில் விருப்பம் இல்லையெனில் அவர்களுக்கு நீலத்தோடு கருப்பு பொருந்திய வண்ணமே நான் கண்களுக்கு பயன்படுத்துவேன்" என்கிறார்.

 

 

03. பளிச்சிடும் முகத்திற்கு

05. சிவப்பு நிற அடையாளங்கள்

"என்னதான் நாம் ஐலைனர், ஐஷாடோ மற்றும் புருவங்களில் வண்ணம் திட்டினாலும், ஷிம்மர் செய்வதன் மூலம் நம் முகம் தெளிவுப்படுத்தப்படும்" இது மாதுரி சோனியின் கருத்து. முகத்தினில் வெளிச்சம் படும் இடங்களில் நாம் க்ளிட்டர் அப்ளை செய்வதன் மூலமாக நமக்கு உடனடி மினுமினுப்பு கிடைக்கும். ரேவா அவர்களின் கருத்துப்படி " முகத்தில் ஒளி படும் இடங்களில் சிறிது பூச்சுகளை செய்து தொடங்க வேண்டும். பளிச்சிடும் முகத்திற்கு அதுவே அடிப்படை."

நிபுணர் குறிப்புகள்: மாதுரி அவர்கள் மேக்கப் தொடங்குவதற்கு முன்பாக நம் உதடுகளை எக்ஸ்பாலியேட் செய்வது அவசியம் என்கிறார். அது நல்ல மாற்றத்தைத் தரும் என்று அவர் நம்புகிறார். மேலும் நம் அனைவரும் டச்சப்பிற்கு லிப்ஸ்டிக், பிளாட்டிங் பேப்பர் எடுத்து செல்ல வேண்டுமென்கிறார். 

நிபுணர் குறிப்புகள்: திருமணத்திற்கு முன்பு நாம் அழகுக்கலை நிபுணரை ஒருமுறை கலந்தாலோசிக்கலாம். அவர்களிடம் நம்முடைய விருப்பம் குறித்தும் தெரிவிக்கலாம். இது திருமணத்தன்று குழப்பத்தை ஏற்படுத்தாது.

 

04. சிவந்த கன்னங்கள்:

05. சிவப்பு நிற அடையாளங்கள்

கன்னங்களுக்கு மேக்கப் போடுவது மற்ற நேரங்களில் கூடுதலான ஒன்றாக கருதினாலும் இந்த இடத்தில் இதுவே முதன்மையானதாக கருதப்படுகிறது. ரேவா கூறுகையில் 2010 வரை பெண்களின் கவனம் முகப்பரிமாணங்களிலும் பளிச்சிடும் வெண்மையிலுமே இருந்தது. தற்போது சிவந்த கன்னங்களையும் எதிர்பார்க்கிறார்கள். லீகுய்ட் அல்லது க்ரீம் சார்ந்த தயாரிப்புகளை கன்னங்களுக்கு பயன்படுத்துவது சிறந்தது என்பது மௌசமின் கருத்து.

நிபுணர் குறிப்புகள்: திருமணத்திற்கு முன்பு சருமத்திற்கான தேவையற்ற முன்னேற்பாடுகளை பின்பற்ற வேண்டாம். அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மௌஸம் கூறுகிறார்.

 

05. சிவப்பு நிற அடையாளங்கள்

05. சிவப்பு நிற அடையாளங்கள்

சிவப்பு திருமணத்திற்கான சிறந்த நிறம்தானே? அழகுக்கலை நிபுணர் ஆகிருதி காந்தியும் அதையே பின்பற்றி வருகிறார். திருமணத்திற்கான வண்ணங்களில் சிவப்பு எப்போதும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறது மற்றும் அது இன்று வரை தொடர்கிறது. இந்த நிறம் என்றேன்றும் நம் கவனத்தை ஈர்க்கவல்லது.

நிபுணர் குறிப்புகள்: ஆகிருதி அவர்கள் திருமணத்திற்கு முன்பு நாம் பின்பற்ற வேண்டியன என்று கூறும் மூன்று குறிப்புகள் இது தான்: சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது, தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது மற்றும் பச்சை காய்கறிகளை நம் உணவுவழக்கத்தில் சேர்த்துக்கொள்வது.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
732 views

Shop This Story

Looking for something else