குழிவிழுந்த முகப்பரு வடுக்கள் என்றால் என்ன, அவற்றை எப்படி குணப்படுத்துவது.

Written by Kayal ThanigasalamNov 30, 2023
குழிவிழுந்த முகப்பரு வடுக்கள் என்றால் என்ன, அவற்றை எப்படி குணப்படுத்துவது.

சருமப்பராமரிப்பு உலகிலேயே, குழிவிழுந்த முகப்பரு வடுக்கள் மிகப் பெரிய சவாலானதும் மற்றும் மிகுந்த பிரச்னைகளைத் தரக் கூடிய சருமப் பாதிப்புகளில் ஒன்றாகும். மிக ஆழமான பள்ளங்களைப் போன்று வடுக்களை சருமத்தின் மீது ஏற்படுத்துபவைதான் குழியுடைய முகப்பரு வடுக்களிலேயே மிகவும் மோசமானதாகும்.  மேலும், பொதுவாகவே முழுமையாக குணப்படுத்த முடியாத மோசமான முகப்பரு வெடிப்புகளை இவை ஏற்படுத்தும். உங்கள் மீதுள்ள அக்கறையால் இதைக் கூறுகிறோம்; மேக்கப் செய்து கொள்ளும்போது இந்த பாதிப்புகளை தற்காலிகமாக மறைக்கலாம் இருந்தாலும், இந்த வடுக்கள் உங்கள் சருமத்தின் மீது நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முன்பு அவற்றிற்கு மிக விரைவில் சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும்.

குழி முகப்பரு வடுக்கள் அதன் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான வகைப்படும்.  அவை:

ஐஸ் பிக் வடுக்கள் -  அவை ஆழமானவை மற்றும் சிறிய துளைகள் போல சருமத்தின் மீது மிக ஆழமாக தோற்றமளிக்கும்.

ரோலிங் வடுக்கள் - இத்தகைய வடுக்கள் ஆழமற்றவை அல்லது கூர்மையற்றவை, ஆனால் இவற்றஇன் மிக மென்மையான விளிம்புகள் சருமத்துடன் ஒன்றிணைந்து சீரற்றதாக மாற்றி விடும்.

பாக்ஸ் வடுக்கள் - அவை சருமத்தின் மீது நீள்வட்டம் அல்லது பெட்டி போன்ற கூர்மையான விளிம்புகளையுடையதாகவும், அகலமாகவும் தோற்றமளிக்கும் மற்றும் ரோலிங் வடுக்களைப் போலவே மிகவும் சீரற்றதாக இருக்கும்.

 

 

குழிந்த முகப்பரு வடுக்கள் எதனால் ஏற்படுகிறது?

வைட்டமின் சி

இவை அட்ராபிக் முகப்பரு வடுக்கள் என்றும் அழைக்கப்படுகிறது, இத்தகைய தொல்லையான குழி முகப்பரு வடுக்கள் தோன்றுவதற்கு சருமத்தின் மீது வீக்கம் மற்றும் கொலாஜன் மீளுருவாக்கம் இல்லாதது தான் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இதனால், முகப்பருப் புண்களை குணப்படுத்தும் நடைமுறையை இது முற்றிலும் சீர்குலைத்து விடும். சருமத்தில் ஏற்படும் எந்தவிதமான புண்களையும் குணப்படுத்த கொலாஜன் மற்றும் திசு உற்பத்தி தன்னைத் தானே மீண்டும் சீராக்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் அனைத்துவிதமான முகப்பரு வெடிப்புகளுக்கும் ஒரே மாதிரியான குணப்படுத்தும் செயல்முறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. எனவே, முகப்பருக்களை கசக்கியோ அல்லது கிள்ளியோ எடுக்கும்போது, ​​முகப்பருக்கள் சருமத்தின் மீது அதிகமானப் பாதிப்பை உண்டாக்கும். இதனால் விளைவாக சருமத்திலுள்ள கொலாஜன் உற்பத்தி குறையும் அதுமட்டுமல்லாமல், இவை ஆழமான மற்றும் ஆழமற்ற குழிகளை ஏற்படுத்தும்.

 

குழிந்த முகப்பரு வடுக்களை எவ்வாறு குணப்படுத்துவது:

வைட்டமின் சி

குழிவான முகப்பரு வடுக்கள் மிகுந்து தொல்லையுடையதாக இருந்தாலும், அவை சிகிச்சையளிக்க முடியாதவை அல்ல. குழிவான முகப்பரு வடுக்களை குணப்படுத்துவதற்கான வழிகள்

ரெட்டினாய்டுகள்

உலகளவில் சருமப் பராமரிப்பிற்கு மிகவும் பிரபலமான மூலப்பொருளான ரெட்டினாய்டுகள் முகப்பரு மற்றும் முகப்பரு வடுக்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி என்பது நல்ல செய்தி.  இது வைட்டமின் ஏ வழித்தோன்றல் மற்றும் ரெட்டினோலை அடிப்படையாகக் கொண்ட பல சரும  பராமரிப்புப் பொருட்களை உள்ளடக்கியதாகும். அவை செல்லுலார் அளவில் சரும உயிரணு உற்பத்தி அளவை அதிகரித்தல், கொலாஜன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வீக்கத்தை சமாளித்தல் போன்றவற்றில் தீவிரமாகச் செயல்படுகின்றன.  இது முக்கியமாக முகப்பரு வடுக்கள், மற்றும் எந்த வகையான முகப்பரு வீக்கங்கள் போன்ற சரும பாதிப்புகள் தோ

 

மைக்ரோ நீட்லிங்

வைட்டமின் சி

மைக்ரோ நீட்லிங்பெயருக்கேற்றாற் போல, சருமத்தின் மீது எண்ணற்ற சிறுசிறு நுண்ணிய ஊசிகளால் செருகி செய்யும் சிகிச்சை முறைக்கு மைக்ரோ- நீட்லிங் என்பதாகும். இது காணும் போது பயமாக இருந்தாலும், எந்தவித பாதிப்பும் இல்லாதது. இதில், குறிப்பாக மைக்ரோநீடில் கருவி இதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உங்கள் முகப்பரு வடுக்களான சிகிச்சை ஒரு நிபுணரின் முன்னிலையில் பாதுகாப்பாக நடைபெற வேண்டுமென்று நீங்கள் விருப்பப்பட்டால், நீங்கள் ஒரு மைக்ரோ-நீடிலிங் சிகிச்சைக்காக உங்கள் சரும மருத்துவரை அணுகலாம். மைக்ரோநீடில் சிகிச்சையின் போது ஏற்படும் காயங்களை சீராக்குவதற்காக உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான செயல்முறையாகும்..

 

கெமிக்கல் பீல்

வைட்டமின் சி

இத்தகைய கெமிக்கல் பீல் சிகிச்சையை வீட்டிலேயே செய்து கொள்வதைவிட சரும கிளினிக்கில் செய்வது மிகவும் பாதுகாப்பானது மற்றும் எளிதானது. இந்த செயல்முறையில் சருமத்தின் மீது ஒரு இரசாயனக் கரைசலை தடவிப் பயன்படுத்தி, அதை அகற்றுவதும் ஆகும், இது சருமத்தின் பாதிப்படைந்த, மற்றும் இறந்த தோல் அடுக்குகளை உரித்து அகற்றி, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து புதிய சருமம் வளர்வதற்கு உதவி செய்கிறது. இந்த கெமிக்கல் பீல் சிகிச்சை குழி முகப்பரு வடுக்களின் தீவிரத்தை வெகுவாக குறைக்கிறது. சாலிசிலிக் மற்றும் கிளைகோலிக் அமிலம் போன்ற பொதுவான ரசாயனங்கள் இந்த பீலில் பயன்படுத்தப்படுகின்றன.

 

லேசான சருமத்தை உரித்தல்

வைட்டமின் சி

சருமத்தை உரிப்பதால் உங்கள் குழி முகப்பரு வடுக்கள் எப்போதுமே மறைந்து போவதற்கு உதவாது என்றாலும், இது ஏற்கனவே பாதித்திருக்கின்ற முகப்பரு வெடிப்புகளுக்கு சிகிச்சையளிக்கவும், உங்கள் சருமத்தின் மீது குழிகள் உருவாகும் வாய்ப்புகளை குறைக்கவும் இது பெரிதும் உதவி புரிகின்றன. உங்கள் சருமத்தில் விடாப்பிடியாக தங்கியிருக்கும் அசுத்தங்கள் மற்றும் சீபங்களை சருமத்தின் துவாரத்தின் அடிவரைச் சென்று சுத்தம் செய்யக் கூடிய சாலிசிலிக் அமிலத்துடன் சேர்ந்திருக்கும் ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்துவது சிறந்த சவாலாகும். முற்றிலும் இறந்த சரும செல்களை நீக்கிவதோடு, சருமத் துவாரங்களை அடைத்து சருமத்திற்கு மென்மையையும், பளபளப்பையும் அளிக்கக் கூடிய Dermalogica Daily Microfoliant Exfoliant ஐ நீங்கள் பயன்படுத்துங்கள். சாலிசிலிக் அமிலத்துடன் மைக்ரோஃபோலியேட்டிங் அரிசி சாறுகள், பப்பாளிச் சாறு, அலன்டோயின் மற்றும் அதிமதுரம் ஆகிய உங்கள் சருமத்திற்கு சிறந்த மருத்துவ குணமுள்ளப் பொருட்களும் இதில் அடங்கும்.

 

வைட்டமின் சி

வைட்டமின் சி

சருமப் பராமரிப்புக்கு மிக சிறந்ததான வைட்டமின் Aயை, தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் முகப்பரு வடுக்களை அகற்ற உதவும். அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படும் இந்த மூலப்பொருள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. பாதிப்படைந்து செல்களை சீராக்கவும், அழற்சிக்கு பிந்தைய முகப்பரு புள்ளிகள் மற்றும் தழும்புகளின் வீக்கம் குறைந்த பிறகு, சருமத்தை ஒளிரச் செய்யவும், சருமத்தின் நிறத்தை சமன்படுத்தவும் இது உதவி செய்கிறது. Lakmé Vitamin C+ Facial Serum. தான் எங்களுடைய சிறந்த தேர்வாகும். உலகில் வைட்டமின் Cயின் வளமான ஆதாரத்தையுடைய ககாடு பிளம் மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது. மிகுந்த ஆற்றலையுடைய வைட்டமின் Cயின் பாதுக்காப்பு கவசம் இந்த சீரம்மில் உள்ளது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதனால் சருமத்தின் அமைப்பு ஆச்சர்யமான வளர்ச்சியைப் பெறும்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
1219 views

Shop This Story

Looking for something else